இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அமைச்சர் சரோஜா பேச்சு
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஆண்டகளூர்கேட்டில் நடந்தது. கூட்டத்திற்கு ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எம்.காளியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும், உலக நாடுகள் மத்தியில் பேசப்படும் திட்டங்களாகவும் உள்ளன.
ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி போன்றோர் அ.தி.மு.க.அரசின் மீது அடிப்படை ஆதாரமற்ற புகார்களை கூறி வருகின்றனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்கள். பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
வெண்ணந்தூர், ராசிபுரம், பட்டணம் குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ராசிபுரம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் அளிக்க முடியும். புறவழிச்சாலையின் 2-ம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.
கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார் உள்பட பலர் பேசினார்கள். ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் இ.கே.பொன்னுசாமி, வக்கீல் தாமோதரன், எல்.எஸ்.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.கலாவதி, ராசிபுரம் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பொன்குறிச்சி முருகேசன், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.