கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 2 பேர் கைது

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-27 22:15 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கட்டபெட்டு வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

 அப்போது அங்கு காட்டுப்பன்றி இறைச்சி விற்ற காந்தி நகரை சேர்ந்த கருப்புசாமி (வயது 65), பில்லிக்கம்பை பஜாரை சேர்ந்த ஆனந்தகுமார் (32) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பில்லிக்கம்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் கண்ணி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

 இதையடுத்து அவர்களிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்