குடிநீர் குழாய்களில் நீர் கசிவு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் நீர் கசிவை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் வினியோகத்திற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இருந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வரி செலுத்தப்படுகிறது. இந்த வரி வசூலை கொண்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் செல்லக்கூடிய குடிநீர் குழாய் பராமரிப்புகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் வேப்பந்தட்டை பெட்ரோல் பங்கு அருகிலும், அம்பேத்கர் நகர் அருகிலும், பாலையூர் தொண்டப்பாடி இடையே வேதநதி ஆற்றிலும் காற்று வாங்கி ( ஏர்பில்டர்) பழுது ஏற்பட்டு நீர் கசிவு ஏற்படுகிறது. இவ்வாறு நீர் கசிவு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீர் வீணாக செல்கிறது. ஒவ்வொரு இடத்திலும் நீர் கசிவதை சரி செய்தால் பல கிராமங்களுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யலாம். எனவே சம்பந்தப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பழுது ஏற்பட்டுள்ள காற்றுவாங்கிகளை சரிசெய்து வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.