டிரைவரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுடன் லாரி கடத்தல்

பால்கரில் டிரைவரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுடன் லாரி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-26 23:35 GMT
மும்பை, 

பால்கரில் டிரைவரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுடன் லாரி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1 கோடி சிகரெட்டுடன் லாரி கடத்தல்

மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று ரூ.1 கோடி சிகரெட் பண்டல்களுடன் ஜெய்ப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. மனோர் அருகே சென்றபோது 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் லாரியை மறித்தது.

திடீரென அந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டி டிரைவரை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று தாக்கினர். பின்னர் அவர்கள் டிரைவரை அங்கு கட்டிப்போட்டுவிட்டு சிகரெட் பண்டல்களுடன் லாரியை கடத்தி சென்றனர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் மனோர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட லாரி மத்திய பிரேதச மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க மனோர் போலீசார் மத்திய பிரதேசம் விரைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்