பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடக்கம்

பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-26 23:00 GMT
ஓசூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில் சேலம் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் வீராங்கனைகளுக்கு சீருடைகளை அமைச்சர் வழங்கினார். போட்டிக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பாகலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புத்திலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சேலம், சங்ககிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில், மூத்தோர், மேல் மூத்தோர் ஆகிய 2 பிரிவுகளில் 10 அணிகளை சேர்ந்த 120 மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ஜெயராம், முனிராஜ், ரவிக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றன.

மேலும் செய்திகள்