தரமான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும் வணிகர்களுக்கு அதிகாரி அறிவுரை

தரமான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும் என வணிகர்களுக்கு அதிகாரி அறிவுறுத்தினார்.;

Update: 2018-10-26 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் பேக்கரி மற்றும் ஸ்விட்ஸ் ஸ்டால் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உணவு பொருட்களில் அதிகப்படியான வண்ணங்களை சேர்க்கக்கூடாது. ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடம், உணவு தயாரிப்பவர்களின் தன் சுத்தம் போன்றவற்றை முறையாக கடை பிடிக்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடம் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். உணவு தயாரிப்பவர்கள் கையுறை, தலையுறை போன்றவற்றை கண்டிப்பாக அணிய வேண்டும்.

தரமான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும். உணவு பொருட் களை விற்பனை செய்யும் இடத்தில் ஈக்கள், பூச்சிகள் நெருங்கா வண்ணன் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் உணவு கலப்படம் தொடர்பான புகார்களுக்கு 94440- 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரமா.ராமநாதன், தியாகராஜன், விஜயகுமார், கார்த்திக் மற்றும் உணவு வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்பிரகாஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்