தீபாவளிக்கு முன்பணம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
தீபாவளிக்கு முன்பணம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுக்கோட்டை,
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நாளை விடுமுறை எடுத்த நாட்களாக கணக்கில் கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை என்று துறைரீதியாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், தீபாவளிக்கு முன்பணம் வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போக்கு வரத்துக் கழக பணிமனைகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு தொ.மு.ச மத்திய சங்க பொது செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மத்திய சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல அறந்தாங்கியில் தொ.மு.ச. கிளை செயலாளர் யோகராஜ் தலைமையிலும், ஆலங்குடியில் செல்வம் தலைமையிலும், கந்தர்வகோட்டையில் ராஜேந்திரன் தலைமையிலும், இலுப்பூரில் சேதுராமன் தலைமையிலும் அந்ததந்த பணிமனைகளின் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.