பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது

நாகை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-26 22:15 GMT
நாகை மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோதண்டபானி, சுமை தூக்கும் தொழிற்சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நெல் கொள்முதல் தடையின்றி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி போனஸ் தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். பணிபுரியும் அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் சட்டப்படியான அகவிலைப்படி 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. எனவே அதனை உடனே வழங்க வேண்டும். மீட்பு வரி முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்