குமரி மாவட்டத்தில் விடிய- விடிய மழை

குமரி மாவட்டத்தில் விடிய-விடிய மழை பெய்தது.

Update: 2018-10-25 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் நள்ளிரவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழை அதிகரித்தது. பின்னர் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்த மழை அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 38 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 9, தக்கலை- 31.2, குழித்துறை- 35, களியல்- 6.4, பூதப்பாண்டி- 12, சுருளோடு- 7.2, கன்னிமார்- 6.2, ஆரல்வாய்மொழி- 6.2, பாலமோர்- 9.2, மயிலாடி- 8, கொட்டாரம்- 10.2, இரணியல்- 16.2, ஆனைகிடங்கு- 22.2, குளச்சல்- 12.6, குருந்தன்கோடு- 30.2, அடையாமடை- 33, கோழிப்போர்விளை- 28, புத்தன்அணை- 7, திற்பரப்பு- 14.6 என்ற அளவில் மழை பெய்து இருந்தது.

இதேபோல் அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 12.2, பெருஞ்சாணி- 6.2, சிற்றார் 1- 15, சிற்றார் 2- 9, மாம்பழத்துறையாறு- 12 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 620 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 484 கனஅடியும், சிற்றார்-1 அணைக்கு 143 கனஅடியும், பொய்கை அணைக்கு 3 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 62 கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது.

அதேநேரத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 606 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 245 கனஅடியும், சிற்றார்-1 அணையில் இருந்து 200 கனஅடியும், பொய்கை அணையில் இருந்து 3 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 62 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருந்தது.

நாகர்கோவிலில் மழை காரணமாக பீச்ரோடு பெரியவிளை காந்திநகரில் ஒரு ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

மேலும் செய்திகள்