நெல்லிக்குப்பம் அருகே: கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை- குடிபோதை தகராறில் தீர்த்துக்கட்டப்பட்டாரா?

நெல்லிக்குப்பம் அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் குடிபோதை தகராறில் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-25 22:00 GMT
நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அருகே உள்ள தோட்டப்பட்டு காலனியை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய வீட்டின் மாடியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. எனவே அவர், கோண்டூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கட்டுமான பணியில் சேத்தியாத்தோப்பு அருகே பெரியநத்தத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி குணசேகரன் (வயது 43) உள்பட 3 பேர் ஈடுபட்ட னர். வேலை முடிந்ததும் இரவில் 3 பேரும் அங்கேயே மது குடித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வீட்டில் குணசேகரன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தது. தலையில் வெட்டு காயங்கள் இருந்தன. அவருடன் வேலை பார்த்த 2 பேரும் மாயமாகி விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று, குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குணசேகரனை யாரோ மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் குணசேகரனை அவருடன் வந்த மற்ற தொழிலாளர்கள் வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்துள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்