சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-10-25 22:00 GMT

விருதுநகர்,

சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம், சட்டப்படியான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருக்கும் போராட்டத்தை நேற்று தொடங்கினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 110 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்