பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் வக்கீல் மானபங்கம் தனியார் நிறுவன அதிகாரி கைது

பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் வக்கீலை மானபங்கம் செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-24 21:37 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் வக்கீல் (வயது 29) வேலை விஷயமாக தாய்லாந்து சென்று இருந்தார். பின்னர் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு தாய்ஏர்வேஸ் விமானத்தில் பாங்காக்கில் இருந்து மும்பை வந்து கொண்டு இருந்தார். இதில் விமானம் புறப்பட்டவுடன் விளக்கு அணைக்கப்பட்டது.

அப்போது பக்கத்தில் இருந்தவரின் கை பெண் வக்கீல் மீது பட்டது. முதலில் கை தெரியாமல் படுவதாக பெண் வக்கீல் நினைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த நபர் வேண்டும் என்றே தொடுவது தெரியவந்தது. இதையடுத்து பெண் வக்கீல் உடனடியாக விமானத்தில் தனது இருக்கையை மாற்றினார்.

தனியார் நிறுவன அதிகாரி

மேலும் அவா் விமானம் மும்பை வந்து இறங்கியவுடன், மானபங்கம் செய்த நபர் மீது சாகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விமானத்தில் பெண் வக்கீலை மானபங்கம் செய்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மத்தியபிரேதச மாநிலம் போபாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் சந்திரகாஸ் திரிபாதி (வயது30) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்