பெங்களூருவில் திருச்சி நடிகரின் தாய் அடித்து கொலை
பெங்களூருவில் திருச்சியை சேர்ந்த நடிகரின் தாய் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை மரியம்நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி வனஜா(வயது 60). இவர்களுக்கு ஜெரால்டுமில்டன் என்ற மகனும், ஜெனித்தா என்ற மகளும் உள்ளனர். திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு முன்னாள் கவுன்சிலராக இருந்த ஜெரால்டுமில்டன் விஷாலுடன் கத்திச்சண்டை, விஜய்சேதுபதி நடித்த றெக்க, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்பட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து உள்ளார். மேலும் இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். ஜெரால்டுமில்டன் மறைந்த திரைப்பட நடிகர் அலெக்ஸின் மருமகன் ஆவார். ஜெரால்டுமில்டனின் சகோதரி ஜெனித்தா திருமணமாகி பெங்களுரூ ராம்நாத் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு கெல்வின்(7) என்ற மகன் உள்ளார். ஜெனித்தாவுக்கு உதவியாக அவரது தாயார் வனஜா திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று தங்கி இருந்தார். நேற்று முன்தினம் பகல் வனஜா வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் சங்கிலி பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.
உடனே அவர்கள் 3 பேரும் அவரை கீழே தள்ளி அருகே கிடந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் காவலாளி உள்பட 3 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.