பாலக்கோடு அருகே: காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது

பாலக்கோடு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-10-24 22:00 GMT
பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டம் கும்மனூர் காப்புக்காட்டில் மர்மநபர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் வனக்காப்பாளர் செல்வம் தலைமையில் வனத்துறையினர் கும்மனூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜிட்டாண்டஅள்ளி வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பழையூரை சேர்ந்த முனியப்பன் (வயது 21) என்பதும், வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்