தண்டவாள பராமரிப்பு பணி: 30–ந்தேதி வரை பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-10-23 23:00 GMT

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட விருதுநகர்–வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. அதையடுத்து, அந்த பாதையில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56769) இன்று(செவ்வாய்க்கிழமை), 25–ந் தேதி, 26–ந் தேதி மற்றும் 28–ந் தேதிகளில் விருதுநகர்–நெல்லை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) இன்று(செவ்வாய்க்கிழமை), 23,25,26–ந் தேதி மற்றும் 28–ந் தேதி ஆகிய நாட்களில் நெல்லை–விருதுநகர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56769) நாளை(புதன்கிழமை) மற்றும் வருகிற 27–ந் தேதி ஆகிய நாட்களில் மதுரை–நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) நாளை(புதன்கிழமை) மற்றும் 27–ந் தேதி ஆகிய நாட்களில் நெல்லை–மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) நாளை(புதன்கிழமை) மற்றும் 27–ந் தேதி மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து சுமார் 2½ மணி நேரம் தாமதமாக பாலக்காடு புறப்பட்டு செல்லும்.

மைசூர்–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16236) வருகிற 29 மற்றும் 30–ந் தேதிகளில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக தூத்துக்குடி சென்றடையும். இந்த ரெயிலுக்கு வழக்கமாக மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இணைப்பு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56767) சேவை உண்டு. இந்த நிலையில், மைசூர்–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதத்தால் இந்த இணைப்பு ரெயில் சேவை அன்றைய தினத்தில் இருக்காது.

தாதர்–நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.11021) வருகிற 29 மற்றும் 30–ந் தேதிகளில் சுமார் ½ மணி நேரம் தாமதமாக நெல்லை ரெயில் நிலையம் சென்றடையும்.

தாம்பரம்–நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16191) வருகிற 29 மற்றும் 30–ந் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு நெல்லை ரெயில்நிலையம் சென்றடையும்.

குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16128) இன்று(செவ்வாய்க்கிழமை), வருகிற 25,26,27,29 மற்றும் 30–ந் தேதிகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு மாலை 3.35 மணிக்கு சென்றடையும்.

நாகர்கோவில்–கச்சிகுடா(ஐதராபாத்) எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16354) இன்று(செவ்வாய்க்கிழமை), 25,26,27,29 மற்றும் 30–ந் தேதிகளில் சுமார் ½ மணி நேரம் தாமதமாக மாலை 4.40 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடையும்.

மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56734/56735) வருகிற 31–ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் மதுரை–விருதுநகர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்–கோவை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56319/56320) வருகிற 25–ந் தேதி இரு மார்க்கங்களிலும் மதுரை–திண்டுக்கல் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை–ஈரோடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56826) இன்று(செவ்வாய்க்கிழமை), 25,26 மற்றும் 27–ந் தேதிகளில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும்.

நாகர்கோவில்–மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16340) இன்று (செவ்வாய்க்கிழமை), வருகிற 25,26 மற்றும் 27–ந் தேதிகளில் கரூர் ரெயில்நிலையத்துக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடையும்.

நாகர்கோவில்–மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16352) வருகிற 25 மற்றும் 28–ந் தேதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது மதியம் 2.50 மணிக்கு திருச்சி ரெயில்நிலையம் சென்றடையும்.

திருவனந்தபுரம்–மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16343) இன்று(செவ்வாய்க்கிழமை), வருகிற 25,26,27–ந் தேதிகளில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.

மேலும் செய்திகள்