ஈரோட்டில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் நேற்று ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கியகுமார் தலைமை தாங்கினார்.
பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகளையும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் உதவி தலைவர் ஸ்ரீதரன் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.