வணிகர் சங்க பேரமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

மத்திய, மாநில அரசுளை கண்டித்து அனைத்து கடைகளையும் அடைத்து உண்ணாவிரத போராட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே நடைபெற்றது.

Update: 2018-10-23 22:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக்கூடிய மத்திய, மாநில அரசுளை கண்டித்து அனைத்து கடைகளையும் அடைத்து உண்ணாவிரத போராட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை தாங்கினார். நந்திவரம்- கூடுவாஞ்சேரி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் இந்திரஜித், செயலாளர் அபுபக்கர், பொருளாளர் பட்டாபிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில கூடுதல் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் ஜி.ஜெ.பிரபாகரன், எஸ்.உத்திரகுமார், கவுரவ தலைவர் எம்.கே.தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்கள்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அனைவரும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் செய்தி தொடர்பாளர் வி.பாபு நன்றி கூறினார். இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்