புதுமாப்பிள்ளை கொலை: கைதான தொழிலாளி சிறையில் அடைப்பு பரபரப்பு வாக்குமூலம்
இரணியல் அருகே புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அழகியமண்டபம்,
இரணியல் அருகே காடேற்றி பகுதியை சேர்ந்தவர் விஜிஸ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜிசுக்கும், அதே பகுதியை சேர்ந்த நெல்சன் (32) என்ற தொழிலாளிக்கும் குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நெல்சன், விஜிசின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்–இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நெல்சனை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
விஜிசும், நானும் பல ஆண்டுகளாக நண்பர்கள். ஆனால், அடிக்கடி எங்களுக்கு இடையே தகராறு வரும் பின்னர் நாங்கள் சமரசம் ஆகி விடுவோம். சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், விஜிஸ் மீண்டும் என்னை தேடி வந்தார். இருவரும் சேர்ந்து மது குடிக்க குருந்தன்கோடு பகுதிக்கு சென்றோம். அங்கு மது போதை ஏறியதும் விஜிஸ் என்னையும், எனது தாயாரையும் தகாத வார்த்தைகள் பேசினார். இதை கேட்டதும் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடனே, நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டேன். வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து கொண்டு வந்து விஜிசை தேடினேன்.
நான் தேடி சென்ற போது, விஜிஸ் குருந்தன்கோடு குளக்கரை அருகே வந்தார். அங்கு அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினேன். பின்னர் அவரது கழுத்தை அறுத்தேன். விஜிஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே அங்கிருந்து ஓடி விட்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நெல்சனை போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நெல்சனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.