தி.மு.க. மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் தி.மு.க. மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம் திருமானூரில் நடைபெற்றது.

Update: 2018-10-21 22:30 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் தி.மு.க. மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம் திருமானூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் செண்பகம் வரவேற்றார். கூட்டத்தில் 24-ந்தேதி அன்று ஆய்வு கூட்டத்திற்காக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி, பெரம்பலூர் வருவதால் அக்கூட்டத்திற்கு திருமானூர் ஒன்றிய மகளிரணி சார்பில் திரளான பெண்களை பங்கேற்க வைப்பது, 2019-க்குள் அதிக மக்களை மகளிரணி மற்றும் தொண்டர் அணியின் உறுப்பினர்களாக சேர்ப்பது, வருகிற அனைத்து தேர்தல்களிலும் வெற்றிக்கு திருமானூர் ஒன்றிய மகளிரணியின் பங்கு பேசப்படும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் பர்வத வர்தினி, சுசீலா மற்றும் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்