மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கடலூரில் 23.40 மி.மீ. பதிவானது

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூரில் 23.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2018-10-21 23:00 GMT
வங்க கடல் பகுதியில் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் லேசான மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

கடலூரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு, விட்டு பெய்தது. காலை 8 மணிக்கு பிறகு மழை இல்லை. வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் காலை 8.30 மணிக்கு லேசான தூறல் விழுந்தது. சற்று நேரத்தில் கன மழை பெய்தது. இடையில் வெயில் அடித்தபோதே மழையும் பெய்தது.

அதன்பிறகு மேக மூட்டமாக மாறி மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்த படியே இருந்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. நடைபாதை வியாபாரிகள் வியாபாரத்தை தொடர முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் சிலர் குடைபிடித்தபடி வியாபாரம் செய்ததை காண முடிந்தது.

இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், அண்ணாமலைநகர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 23.40 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக அண்ணாமலைநகரில் 0.20 மில்லி மீட்டரும் பதிவானது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

வளாகம்- 20.20

சிதம்பரம்-14.60

குடிதாங்கி -13.75

புவனகிரி -11

பண்ருட்டி -10

வானமாதேவி- 8

குறிஞ்சிப்பாடி - 7

சேத்தியாத்தோப்பு - 5

வடக்குத்து -5

கொத்தவாச்சேரி -3

லால்பேட்டை- 3

பரங்கிப்பேட்டை -3

காட்டுமன்னார்கோவில்

-2

மேலும் செய்திகள்