நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-10-21 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியும், இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆம்னி பஸ்கள் அனுமதியில்லாத வழிதடங்களில் இயங்குவதை தடுக்க வேண்டும், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் கிஷோர்குமார், ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன், மாநில செயலாளர் தியாகராஜன், நகர இளைஞரணி செயலாளர் எட்வின், சந்தோஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஆம்னி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்