வீரவணக்க நாள்: மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

சிவகங்கையில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் மரணம் அடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-10-21 22:00 GMT
சிவகங்கை, 

மாவட்ட காவல் துறை சார்பில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சி சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது போலீசார் வனத்தை நோக்கி 21 தடவை துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட திருப்பாசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதனின் தந்தை தவசிபால் மற்றும் ராணுவத்தில் வீர மரணமடைந்த இளையராஜாவின் மனைவி செல்வி ஆகியோர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

இது போல சிவகங்கையை அடுத்த அரசனூரில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் கமாண்டெண்ட் ஜஸ்டீன்ராபர்ட் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்