கொள்ளிடம் அருகே தீயில் எரிந்து கூரை வீடு சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

கொள்ளிடம் அருகே தீயில் எரிந்து கூரை வீடு சாம்பலானது. இதில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.

Update: 2018-10-21 22:00 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர்கூரை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மின்கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வருவாய் ஆய்வாளர் தாரணி நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பாஸ்கர் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்