காஞ்சீபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு; போலீஸ் டி.ஐ.ஜி. மலர் வளையம் வைத்து மரியாதை

காஞ்சீபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2018-10-21 23:00 GMT

காஞ்சீபுரம்,

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21–ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்ரமணியன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு போலீசார் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செய்தார். அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் மற்றும் திரளான போலீசார் உடன் இருந்தார்கள்.

மேலும் செய்திகள்