நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

Update: 2018-10-21 22:15 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் முழு கொள்ளளவு 143 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 98.35 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 335 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 604.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புஷ்கர விழா நடைபெறுவதையொட்டி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதனால் அணையில் நீர்மட்டம் உயரவில்லை.

சேர்வலாறு அணைப்பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்தது. அதனால் அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சேர்வலாறு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 98.24 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அணையில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.84 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 85 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டர்) வருமாறு:-

பாபநாசம்- 7, சேர்வலாறு- 2, மணிமுத்தாறு- 53, கருப்பாநதி- 14, குண்டாறு- 20, நம்பியாறு-11, கொடுமுடியாறு- 20, அடவிநயினார்- 20, அம்பை- 46, ஆய்குடி- 10.20, சேரன்மாதேவி- 20, நாங்குநேரி- 85, பாளையங்கோட்டை- 5.20, ராதாபுரம்- 16, சங்கரன்கோவில்- 31, செங்கோட்டை- 8, சிவகிரி- 42, தென்காசி- 10.20, நெல்லை- 2.

மேலும் செய்திகள்