நவராத்திரியை முன்னிட்டு 11 கோவில் தேர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் நவராத்திரியை முன்னிட்டு 11 கோவில் தேர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரியில் நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 11 தேர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள கவிஈஸ்வரர், நரசிம்ம சாமி, காமாட்சி அம்மன், கிருஷ்ணர் கோவில், காட்டிநாயனபள்ளி முருகன் கோவில், சீனிவாசபெருமாள், விநாயகர் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட 11 கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி இரவு தொடங்கி விடிய விடிய பல்வேறு ஊர்கள் வழியாக வலம் வந்தது.
இறுதியாக 11 தேர்களும் கிருஷ்ணகிரி பழையபேட்டைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்களில் வில்வ இலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தேர்பவனியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.