அயோத்தி ராமர் கோவில் விவகாரம்: உத்தவ் தாக்கரேக்கு 10 கேள்விகள் - நவநிர்மாண் சேனா எழுப்பியது
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் உத்தவ் தாக்கரேக்கு நவநிர்மாண் சேனா 10 கேள்விகளை எழுப்பி உள்ளது.
மும்பை,
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார். நவம்பர் 25-ந் தேதி அயோத்தி செல்ல உள்ளதாகவும், அப்போது ராமர் கோவில் கட்டுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் மும்பை தாதரில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான ‘சேனா பவன்’ எதிரே ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு 10 கேள்விகளை நவநிர்மாண் சேனா கேட்டு உள்ளது.
அதில் குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மராட்டியத்தில் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா?. பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?. பல்லாங்குழிகள் இ்ல்லா சாலைகள் அமைந்து விடுமா?. பணவீக்கம் சரியாகி விடுமா?. விவசாயிகள் தற்கொலை நின்று விடுமா?. விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்து விடுமா?. வறட்சி நீங்கி விடுமா?. ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படுமா? என கேட்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டேயை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அயோத்தியில் ராமர் கோவில் கட்டி விட்டால் சாமானிய மக்களை சூழ்ந்துள்ள பிரச்சினைகள் தீர்ந்து விடுமா என்ன?. தேர்தலை முன்வைத்து இந்த பிரச்சினை கிளப்பப்படுகிறது. சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் உத்தவ் தாக்கரேக்கு கேள்விகளை எழுப்பி உள்ளோம். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்” என்றார்.