நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேண்டுகோள்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

Update: 2018-10-20 22:45 GMT
சீர்காழி,

சீர்காழியில், அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் ராமலிங்கம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் மணி, நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கார்த்திகேயன், மதிவாணன், மாவட்ட பிரதிநிதி லெட்சுமி, இளைஞர் பாசறை நகர செயலாளர் தமீம்அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் மணி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் பாரதி, பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, மாவட்ட பொருளாளர் செல்லையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை ஏழை-எளிய மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக அ.தி.மு.க. இருந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

மக்களுக்காக என்றும் பாடுபடும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், நற்குணன், பேரூர் செயலாளர் ரவி, பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் மணிவண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்