புழல் சிறையில் போலீஸ் பக்ருதீன் 3–வது நாளாக உண்ணாவிரதம்
புழல் சிறையில் டி.வி. உள்ளிட்ட வசதிகள் மீண்டும் ஏற்படுத்தி தரக்கோரி புழல் சிறையில் போலீஸ் பக்ருதீன் நேற்று 3–வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
செங்குன்றம்,
புழல் சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர். இவர் கடந்த 18–ந்தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறையில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்வதை நிறுத்த வேண்டும், மீண்டும் கைதிகளின் அறைகளில் டி.வி., எப்.எம். உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போலீஸ் பக்ருதீன் நேற்று 3–வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.