சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-20 21:45 GMT

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானிக்கு சூனாம்பேடு பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது மேற்பார்வையில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் சூனாம்பேடு போலீஸ்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சூனாம்பேடு அருகே வென்னாங்குப்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கும்மிடிபூண்டிக்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.

அதில் 1,240 வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் லாரியுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக லாரி டிரைவரான செய்யூரை அடுத்த புதுக்குடியை சேர்ந்த முனியான்டி (வயது 40 ), சூனாம்பேடுவை அடுத்த கொளத்தூரை சேர்ந்த முருகன் ( 42 ) மரக்காணத்தை அடுத்த காரிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (34) ஆகியோரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்