‘பீட்சா’ வேண்டாமே!
பக்கவாதம் மற்றும் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.;
பக்கவாதம் மற்றும் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. சாப்பிடும் உணவு வகைகளுக்கும், ரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஒருசிலவகை உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். அத்தகைய உணவுகளின் பட்டியல்:-
* சர்க்கரை, உப்பு இரண்டையும் குறைந்த அளவில்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகள், பலகாரங்களில் நேரடியாக சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான சர்க்கரையை பழங்கள், ஜூஸ் மூலம் பெறலாம்.
* கடல் உணவுகள், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவைகளை அளவோடு சாப்பிட வேண்டும்.
* தக்காளி பழங்களை சமையலுக்கு மட்டும் பயன்படுத்துவதுதான் நல்லது. தக்காளி ஊறுகாய், தக்காளி சாஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அவைகளை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்த தொடங்கிவிடும்.
* தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்.
* மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எளிதில் உயர் ரத்த அழுத்த பிரச்சினை பாதிப்புக்கு ஆளாகிவிடுவார்கள். அதில் கலந்திருக்கும் சர்க்கரை மூலப்பொருட்கள் உடல்நல குறைபாட்டுக்கு வழி வகுத்துவிடும்.
* நிறைய பேர் பீட்சாவை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதில் சோடியம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. அதில் தக்காளி சாஸும் அதிகம் சேர்க்கப்படுகிறது. அதுவும் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்த காரணமாகிவிடும்.
* காபியில் உள்ளடங்கி இருக்கும் காபினும் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்த காரணமாக அமைந்திருக்கிறது.