ரூ.42 கோடி ஜி.எஸ்.டி. கட்டாத தொழில் அதிபர் கைது

ரூ.42 கோடி ஜி.எஸ்.டி. கட்டாத தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-17 23:40 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் தொழில் செய்து வரும் தொழில்அதிபர் மஞ்சிலால் என்பவர் சரியாக கர்நாடக வணிக வரித்துறைக்கு ஜி.எஸ்.டி. கட்டாமல் இருந்துள்ளார்.

இதுபற்றிய புகாரின் பேரில் கர்நாடக வணிகவரித்துறை அதிகாரிகள் அவரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ரூ.245 கோடிக்கு தொழில் செய்ததுடன், இறந்த பெண்ணின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு ரூ.42 கோடி ஜி.எஸ்.டி. கட்டாமல் அதிகாரிகளை ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை பொருளாதார குற்றத்துக்கான சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்