இசையமைப்பாளர் அனு மாலிக் மீது பாடகி சுவேதா பண்டித் பாலியல் புகார்
வலைத்தளத்தில் மீ டூ இயக்கத்தின் மூலம் முக்கிய துறைகளில் உள்ள பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தி திரைப்பட உலகம் சூறாவளி புயலில் சிக்கியுள்ளது. பிரபல இந்திப்பட இசையமைப்பாளர் அனு மாலிக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.
இவர் மீது பாடகி சுவேதா பண்டித் வெளியிட்ட பாலியல் புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் 2000-ம் ஆண்டு வெளியான “மொகமதின்” படத்தில் பாடகியாக அறிமுகமானேன். பின்னர் எனக்கு பல்வேறு பாடல்கள் பாட வாய்ப்பு குவிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் 2001-ம் ஆண்டு இசையமைப்பாளர் அனுமாலிக் என்னை தொடர்புகொண்டு அந்தேரியில் உள்ள எம்பயர் ஸ்டூடியோவுக்கு வர சொன்னார். அங்கு சென்று அனுமாலிக்கை சந்தித்தேன். அப்போது “அவரா பாகல் திவான்” படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு வேலையில் இருந்தார்.
அவர் என்னை ஒரு அறையில் காத்திருக்குமாறு கூறினார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த அவர் என்னிடம் சில வரிகள் பாடுமாறு கூறினார். நான் நன்றாக பாடி காட்டினேன். பின்னர் அவர் என்னிடம், நான் உனக்கு பாட வாய்ப்பு தருகிறேன். அதற்கு முன் எனக்கு ஒரு முத்தம் தா என்று கூறி சிரித்தார். நான் என் வாழ்க்கையில் பார்த்த மோசமான சிரிப்பு அதுதான். என் முகம் உணர்ச்சியற்று, வெளிர்த்துபோனது. என் வயிற்றில் யாரோ கத்தியால் குத்தியதை போன்று உணர்ந்தேன்.
அதுதான் நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமான தருணம். அப்போது எனக்கு 15 வயது தான் ஆகியிருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன் பாடகி சோனா மோகபத்ராவும் அனு மாலிக்கை “தொடர் பாலியல் குற்றவாளி” என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.