இருவேறு இடங்களில் ரூ.12 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : 2 பேர் கைது

மும்பை காட்கோபர்- மான்கூர்டு லிங் சாலையில் ஒருவர் போதைப்பொருளுடன் வருவதாக காட்கோபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

Update: 2018-10-17 22:55 GMT
மும்பை,

போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர்.

இதில், அவரிடம் 89 கிராம் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் மன்சார் முகமது சேக்(வயது43) என்பது தெரியவந்தது.

மும்பை நாக்பாடா பகுதியை சேர்ந்தவர் இர்பான் யாசின் சேக்(36). இவர் லால்பகதூர் சாஸ்திரி மார்க் பகுதியில் போதைப்பொருளுடன் சுற்றித்திரிந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள எபெட்ரின் மற்றும் சுடோ எபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி 2 சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்