வேப்பூர் அருகே: மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-10-17 21:45 GMT
வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள விநாயகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகேந்திரன் (வயது 34). சம்பவத்தன்று இவர் வேப்பூர்-சேலம் சாலையில் நடந்து சென்றார். பெரியநெசலூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் பண்ருட்டி அருகே நடுசாத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் கார்த்திகேயன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நாகேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான நாகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகேந்திரன் மனைவி கோகிலாதேவி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜான்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்