கோவை மாநகர பகுதியில் கூடுதலாக 100 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். சேவை - அதிகாரிகள் தகவல்
கோவை மாநகர பகுதியில் கூடுதலாக 100 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். சேவை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதுபோன்று, குறைந்த கட்டணத்தில் சுத்தமான குடிநீர் வழங்கும் குடிநீர் ஏ.டி.எம். சேவை என்ற திட்டம் கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற திட்டம் கோவை மாநகர பகுதியிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் இருந்து தண்ணீர் எடுத்து, அந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து எந்திரம் மூலம் குடிநீர் குறைந்த விலைக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனம் மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பஸ்நிலையங்கள், சுங்கம் சந்திப்பு உள்பட 30 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்திய பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால், பொதுமக்களுக்கு வசதியாக இருக்கிறது. எனவே மாநகர பகுதியில் கூடுதலாக மேலும் சில இடங்களில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகர பகுதியில் ஏற்கனவே 30 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். சேவை அமைக்கப்படுகிறது. ஏ.டி.எம். எந்திரம் எப்படி இருக்குமோ அதுபோன்று தண்ணீர் வழங்கும் எந்திரம் இருக்கும். 7 ரூபாய்க்கு நாணயங்களை அந்த எந்திரத்தில் போட வேண்டும். அதாவது ஒரு 5 ரூபாய் நாணயம், ஒரு 2 ரூபாய் நாணயமோ அல்லது 2 ஒரு ரூபாய் நாணயத்தையோ அதில் போட வேண்டும்.
இவ்வாறு நாணயத்தை அந்த எந்திரத்தில் போட்டவுடன், 20 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீரை குடத்திலேயோ அல்லது கேனிலேயா பிடித்துக்கொள்ளலாம். முழுக்க முழுக்க ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்துதான் தண்ணீர் வழங்கப்படும்.
மாநகராட்சி சார்பில் அணைகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் இந்த ஏ.டி.எம். சேவை திட்டத்துக்கு வழங்கப்படாது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்தான் இந்த சேவை அமைக்கப்படுகிறது. எனவே மாநகர பகுதியில் மேலும் கூடுதலாக 100 இடங்களில் இந்த குடிநீர் ஏ.டி.எம். சேவையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் வருகிற 26-ந் தேதி நடக்க உள்ளது. இந்த திட்டதை செயல்படுத்தும்போது, கூடுதல் விலைக்கு பொதுமக்கள் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. அத்துடன் இங்கு வழங்கப்படும் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.