சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.31 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.31 லட்சத்துக்கு பருத்தி விற்பனை ஆனது.

Update: 2018-10-17 21:45 GMT
சத்தியமங்கலம், 


சத்தியமங்கலம் கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், வடவள்ளி, புதுபீர்கடவு, கொளத்தூர், செண்பகபுதூர், கே.என்.பாளையம், டி.ஜி.புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் மொத்தம் 1,800 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 210-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 300-க்கும் ஏலம் போனது. பருத்தி மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

இதேபோல் நடந்த வாழைப்பழ ஏலத்துக்கு விவசாயிகள் 3 ஆயிரத்து 400 வாழைப்பழ தார்களை கொண்டு வந்திருந்தனர். இதில், கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று 37 ரூபாய்க்கும், நேந்திரம் 24 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதேபோல் பூவன் தார் ஒன்று ரூ.410-க்கும், ரஸ்தாளி ரூ.410-க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், செவ்வாழை ரூ.610-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், மொந்தன் ரூ.230-க்கும், பச்சைநாடான் ரூ.400-க்கும் ஏலம் போனது. வாழைப்பழம் மொத்தம் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஈரோடு, சத்தியமங்கலம், சேலம், கோபி, அவினாசி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தி மற்றும் வாழைப்பழத்தை ஏலம் எடுத்துச்சென்றனர். 

மேலும் செய்திகள்