உளுந்தூர்பேட்டை அருகே: மின்னல் தாக்கி பெண் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.

Update: 2018-10-17 22:00 GMT
விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா மாரனோடை கிராமம் அம்சம் நகரை சேர்ந்தவர் அம்புரோஸ் மனைவி ரெஜினாமேரி (வயது 45). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் ரெஜினாமேரி தனது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

உடனே அவரை தேடி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிலத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள நிலத்தில் ரெஜினாமேரி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மாரனோடை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தபோது மின்னல் தாக்கி ரெஜினாமேரி இறந்திருப்பது தெரியவந் தது.

இதுகுறித்த தகவலின்பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெஜினாமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்