காண்டிராக்டர் மனைவியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி கைவரிசை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி காண்டிராக்டர் மனைவியை தாக்கி 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றான்.
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகே உள்ள சோட்டப்பணிகள் தேரிவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). மார்பிள் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெயலெட்சுமி (வயது 35).
நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெயலெட்சுமி வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர், பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒரு ஆசாமி வந்தார். அந்த ஆசாமி, ஜெயலெட்சுமியின் அருகில் வந்ததும் திடீரென அவரை தாக்கினான். இதில் நிலைதடுமாறிய ஜெயலட்சுமி நடுரோட்டில் விழுந்து, ‘திருடன்... திருடன்‘ என்று சத்தம் போட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம ஆசாமி, ஜெயலெட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான்.
மர்ம ஆசாமி தப்பிச்செல்வதை அப்பகுதியில் நின்ற வாலிபர்கள் சிலர் பார்த்து, தங்களது மோட்டார்சைக்கிளில் விரட்டி சென்றனர். ஆனால், அதற்குள் ஆசாமி வேகமாக தப்பிச்சென்று விட்டான்.
இந்த சம்பவம் குறித்து ஜெயலெட்சுமி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஞான செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை ஆய்வு செய்தனர்.
அப்போது, கேமராவில் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமியின் உருவம் பதிவாகியிருந்தது. போலீசார் கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.