ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண

Update: 2018-10-17 22:15 GMT

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

ஆறுமுகநேரி திசைகாவல் வடக்கு தெருவில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி உள்ளது. இங்கு நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு மாணவிகளுக்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவினை ஆய்வு செய்தார். பின்னர் அவர், விடுதியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும். அது வரையில் தற்காலிகமாக மாற்று கட்டிடத்தில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி செயல்பட ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி

பின்னர் ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைப்பாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்