டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: பெரியகண்ணனூர் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பெரியகண்ணனூர் கிராமத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.
காளையார்கோவில்,
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி கலெக்டர் ஜெயகாந்தன் திடீரென மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்
நேற்று அவர் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் செங்குளம், பெரியகண்ணனூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். செங்குளம் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு சென்ற கலெக்டர் அங்கு வழங்கப்படும் தண்ணீர் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதா என்ற சோதனை செய்தார். பின்னர் அங்கு உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் குடங்கள் சரியாக மூடிவைக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வீடுகள் மற்றும் தெருக்களை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மழைநீர் மற்றும் கழிவுநீர்கள் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் தேங்குவதால் லார்வா புழுக்கள் உருவாகி, டெங்கு போன்ற கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய கொசுக்கள் உற்பத்தியாகுகின்றன. இதை ஆரம்பத்திலேயே தடுக்கும் வண்ணம் ஒவ்வொரு வீடுகளிலும் தண்ணீர் குடம் மற்றும் நீர்த்தேக்கும் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும். அதே போல் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களை அகற்றிவிட வேண்டும். அவ்வப்போது வீட்டின் உட்பகுதி, வெளிப்பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
அதேபோல் குடிநீரை காய வைத்து பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி தெரிந்தால், அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சி பணியாளர்கள் தினமும் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாதுகாப்பு செய்து வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, அதன்விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களும் தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கேற்ப பிடித்து பயன்படுத்த வேண்டும்.
பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு புதிய இணைப்புகளை பொருத்தி தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் முருகேசன், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர், தாசில்தார் பாலகுரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.