வேதாரண்யம் அருகே கோஷ்டி மோதல்; பெண் உள்பட 2 பேர் படுகாயம் சிறுவன் கைது

வேதாரண்யம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-16 22:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று 2 பேரின் தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது முருகானந்தம், தாய் காளிமுத்து உள்ளிட்டோர் சேர்ந்து சுந்தரலிங்கத்தின் தரப்பை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (வயது41) என்பவரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்கண்ணனை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் முருகானந்தத்தின் தாய் காளிமுத்துவும் படுகாயம் அடைந்தார். அவருக்கும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்களும் வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோஷ்டி மோதலில் தொடர்புடைய 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்