காயாமொழியில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை
காயாமொழியில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்,
காயாமொழியில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
5–ம் ஆண்டு நினைவு தினம்
‘மாலை முரசு’ நிர்வாக ஆசிரியர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 5–ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் அருகே காயாமொழியில் அமைந்துள்ள பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், அங்குள்ள பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவ படத்துக்கு பூஜைகள் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விஜயசிங் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தையல்பாகு ஆதித்தன், குமரேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், ராஜேஷ் ஆதித்தன், ராகவ ஆதித்தன், அச்சுத ஆதித்தன், கே.ஆர்.எஸ்.ஆதித்தன், தூத்துக்குடி அனைத்து நாடார் நலச்சங்க தலைவர் மனோகர், செயலாளர் செல்வராஜ்,
சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சோடா ரவி, தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, ஆறுமுகநேரி நகர செயலாளர் சிவகுமார், திருச்செந்தூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சியாமளா, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் ஜெபகுமார், அமைப்பு செயலாளர் சிவபெருமாள், செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் பார்வதி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.