பயிர் நஷ்டத்துக்கு வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும் விவசாயிகள் கோரிக்கை
பருவமழை குறித்து தவறான அறிக்கை அளித்த வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் நஷ்டத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புனே,
மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் நல்ல மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் இந்த முறை சராசரி அளவை காட்டிலும் மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
இதில் வானிலை அறிக்கையை நம்பி நடவு பணிகளை மேற்கொண்ட விவசாயிகளும் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் வானிலை அறிக்கை மையத்தின் மீது விவசாயிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய மராட்டியம் மற்றும் பீட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது மழை பொழிவு குறித்து தவறான அறிக்கை கொடுத்ததால், பயிர் நஷ்டத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- சராசரி அளவை காட்டிலும் அதிகமாக 104 சதவீதம் மழைபொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. ஆனால் மரத்வாடா மண்டலத்தில் வறட்சி நிலவுகிறது. வானிலை ஆய்வுமைய அறிக்கையை நம்பிய விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் எம்.பி.யும், சுவாபிமானி ேசத்காரி சங்காதனா அமைப்பின் தலைவருமான ராஜூ ஷெட்டி கூறுகையில், “பருவமழை குறித்து வருங்காலத்தில் இதேபோன்ற தவறான அறிக்கை அளிக்கப்பட்டால், வானிலை மையத்தை இழுத்துமூடி பூட்டுப்போடவும் நாங்கள் தயங்கமாட்டோம்.
மராட்டியத்தில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும், கால்நடைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.