வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தத்துக்கு 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
நாகர்கோவில்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் ஆணையரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான அதுல் ஆனந்த், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் (வளர்ச்சி), உதவி கலெக்டர்கள் ராஜகோபால் சுங்கரா (பத்மநாபபுரம்), பவன்குமார் கிரியபனவர், பிரதிக் தயாள் (பயிற்சி) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த 1-9-2018 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்பிறகு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி புதிய வாக்காளர் சேர்த்தல், விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயராவது விட்டுப் போய் இருந்தால் வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. நடைபெற உள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 1-1-2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் தவறாக உள்ள வாக்காளர் பெயர், உறவுமுறை, புகைப்படம் போன்ற விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8-ம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ-ம், இறந்து போன, இடம் பெயர்ந்த, இருமுறை இடம்பெற்ற வாக்காளர்களின் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7 உடன் இறப்பு சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் படிவம் 6 ஏ-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
வருகிற 31-ந் தேதி வரை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் பொதுமக்கள் படிவங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாகவும் படிவங்களை எளிய முறையில் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.