கோவிலில் விளக்கு ஏற்றிய தகராறு: தொழிலாளி அடித்து கொலை வாலிபர் கைது
கோவிலில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்,
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர், தெருவுவிளையை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 47), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமான சில மாதங்களில் மனைவி பிரிந்து சென்றார். அதன்பின்பு, சசிகுமார் தனியாக வசித்து வந்தார்.
இவரது வீட்டின் அருகே குடும்ப அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக சசிகுமாருக்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஆனான்விளையை சேர்ந்த உறவினர் ஜெகதீஸ் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினார். அப்போது அங்கு வந்த சசிகுமார், அவரை தடுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஜெகதீஸ் தனது தம்பி மகேசிடம் (33) கூறினார்.
இதையடுத்து நேற்று மதியம் மகேஷ் தெருவுவிளைக்கு சென்று அண்ணனிடம் தகராறு செய்தது தொடர்பாக சசிகுமாரிடம் தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ், சசிகுமாரை தாக்கி கீழே தள்ளிவிட்டார். அத்துடன் ஆத்திரம் அடங்காமல் முகத்தில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சசிகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனே, மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மகேஷை போலீசார் தேடினர். அப்போது, அவர் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட மகேஷ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.