கவர்னர் மீது அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுவது இல்லை - முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர்

கவர்னர் மீது அமைச்சர்கள் யாரும் குற்றஞ்சாட்டுவதில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கூறினார்.;

Update: 2018-10-14 23:00 GMT

புதுச்சேரி,

அ.தி.மு.க.வுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நெல்லித்தோப்பில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கலந்துகொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வெங்கடசாமி, முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை கவர்னர் கிரண்பெடி தன்னுடைய பணியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் அவர் மீது முதல்–அமைச்சர் நாராயணசாமி மட்டுமே குறைகளை கூறிவருகிறார். அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் குற்றஞ்சாட்டுவதை நிறுத்திவிட்டனர்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் பேசி வருகின்றனர். நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடப்பதால் சட்டப்படி ஆட்சியை நீக்குவதற்கான நடவடிக்கையில் அ.தி.மு.க. ஈடுபடும்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த அரசு விரைவில் கவிழும்.

எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர்களாக பதவி வகிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் அனுப்பவில்லை என்கிறார். அப்படியானால் இடைக்கால தடை கேட்டு ஐகோர்ட்டை அணுகவேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறு ஓம்சக்தி சேகர் கூறினார்.

மேலும் செய்திகள்