மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சஞ்சய் நிருபத்தை நீக்க வேண்டும் ராகுல் காந்தியிடம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்

மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சஞ்சய் நிருபத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-10-13 23:30 GMT
மும்பை, 

மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சஞ்சய் நிருபத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல் காந்தியுடன் சந்திப்பு

காங்கிரஸ் பொது செயலாளர் மல்லிகர்ஜூன கார்கே கடந்த மாதம் மும்பை வந்தார். அப்போது மும்பை காங்கிரஸ் தலைவராக மிலிந்த் தியோராவை நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் மல்லிகர்ஜூன கார்கேயிடம் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசவும் அனுமதி கேட்டு இருந்தனர்.

இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட், நசீம்கான், ஜனார்த்தன் சந்ருக்கர், கிருபாசங்கர் சிங், பாய் ஜகதாப், மதுசவான், பாபா சித்திக், அமின் பட்டேல் உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.

நீக்க வேண்டும்

அப்போது அவர்கள் தற்போது மும்பை காங்கிரஸ் தலைவராக உள்ள சஞ்சய் நிருபத்தை நீக்க வலியுறுத்தியதாக தெரிகிறது. எனினும் இந்த தகவல் குறித்து சஞ்சய் நிருபம் கருத்து கூற மறுத்துவிட்டார்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மும்பையில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து கட்சியை வலுப்படுத்தும் வகையில் சஞ்சய் நிருபம் மும்பை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்