திருமணமாகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

திருப்புவனம் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-10-12 22:15 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 29). திருமணமாகாத இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

 இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதில், திருமணமாகாமல் ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்