கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதவன், மண்டல பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமபுற கல்லூரிகளில் உள்ள பேராசிரியர் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல அரசு மகளிர் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணை தலைவர் குஞ்சம்மாள் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் யசோதா உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.